தமிழ்தேசிய கூட்டமைப்பை சிதறடிக்க ராஜபக்கசர்களால் திட்டமிட்டு அனுப்பப்பட்ட சுமந்திரன்!
தமிழ் தேசிய கூட்டமைப்பை முழுமையாக சிதறடித்து, அதனை சிங்களமயப்படுத்துவதற்காக ராஜபக்கசர்களால் திட்டமிட்டு சுமந்திரன் (M. A. Sumanthiran) அனுப்பப்பட்டுள்ளார் என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் வடக்கு கிழக்கில் மக்கள் வாக்குகளை சிதறடிக்க தோன்றியிருக்கும் கட்சிகளால் மக்கள் திணறி போயுள்ளதாக கூறப்படுகின்றது.
விடுதலைக்காக போராடி கொண்டிருக்கும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு அனுர ஆட்சியிலும் தொடர்கின்றது.
இலங்கை நாடாளுமன்றத்திற்குள் எங்களுடைய தலைவர்கள் என்ன பேசினாலும், எந்த மாற்றமும் வரப் போவதில்லை.
சுமந்திரனுக்கு வாக்கிடுபவர்கள் இனத்துரோகியாகத்தான் இருப்பார்கள், தமிழரசுக்கட்சி சுமந்திரனின் வீடாக மாற்றப்பட்டுள்ளது.
சுமந்திரன் தியாகியா, துரோகியா?” உலகத்தின் அதியசமான மக்களாக ஈழ தமிழ் மக்கள் மாறிவருகின்றனர்” என்றார்.
இந்த விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |