ராஜபக்சவினர் கொள்ளையடிக்கின்றனர் என்று நம்பினால் அவர்கள் அறிவில்லாதவர்கள்..!

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna Rajapaksa Family
By Kanna Sep 12, 2022 06:34 AM GMT
Report

ராஜபக்சவினர் கொள்ளையடிக்கின்றனர் என்று ஒருவர் நம்பினால், அவருக்கு நாடு பற்றியும், அரசியல் பற்றியும் அரச நிர்வாகம் பற்றியும் அறிவில்லாதவராக இருப்பார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கேகாலை பிரதேசத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " இந்த சந்தர்ப்பத்தில் ராஜபக்சவினர் கொள்ளையடிக்கின்றனர் என்று கூறினால், எவரும் நம்ப மாட்டார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை 

ராஜபக்சவினர் கொள்ளையடிக்கின்றனர் என்று நம்பினால் அவர்கள் அறிவில்லாதவர்கள்..! | Rajapaksha Family Sri Lanka Politcs

கடந்த இரண்டு ஆண்டுகளில் ராஜபக்சவினருக்கு எதிராக கொள்ளையடிப்பு தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை. கடந்த காலத்தில் வேறு விதமான குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்பட்டன. இம்முறை அரசாங்கத்தில் ராஜபக்சவினருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை.

கட்சியின் தலைவரான மகிந்த ராஜபக்ச தற்போதும் கட்சியுடன் மிக வலுவாக இருக்கின்றார். அந்த பலத்துடன் எவ்வித பிரச்சினையும் இன்றி கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை திறனுடன் முன்நோக்கி கொண்டு செல்கிறோம்.

தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எமது கட்சிக்கு இதுவரை எந்த பிரச்சினைகளும் ஏற்படவில்லை. கட்சி என்ற வகையில் எதிர்காலத்திலும் இதே நிலைமை தொடரும் என எதிர்பார்க்கின்றோம்.

அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிப்பதா இல்லையா என்பது எம்முடன் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல, அது அதிபருக்குரிய பணி", எனக் குறிப்பிட்டார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி