தப்பியோடும் முக்கிய புள்ளிகள்: அழைப்பாணை விடுத்தும் புறக்கணிக்கப்படும் விசாரணை!
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடத்திய விசாரணைக்காக வாக்குமூலம் அளிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர் நேற்று (02) லஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை.
அவர் கடற்றொழில் அமைச்சராக இருந்த காலத்தில் கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வாக்குமூலம் அளிக்க அழைப்பு
இதன்படி, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சிறப்பு விசாரணைகள் தலைமை ஆய்வாளர், ராஜித சேனாரத்னவுக்கு நேற்று காலை 9 மணிக்கு குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிக்கு முன்னிலையாகுமாறு எழுத்துப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
எனினும், அவரது சார்பாக அவரது சட்டத்தரணி ஆணைக்குழுவில் முன்னிலையாகி, ராஜித உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், விசாரணையில் பங்கேற்க முடியாது என்றும் கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.
திகதி கோரும் விமல்
இதேவேளை, முன்னாள் வீடமைப்பு மற்றும் கட்டுமான அமைச்சர் விமல் வீரவன்சவும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் அமைச்சராக இருந்த காலத்தில் சில கடைகளை விற்பனை செய்தது தொடர்பான விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டுள்ளது.
ஆனால் அவரும் கொடுக்கப்பட்ட திகதியில் முன்னிலையாக முடியாது என்று அறிவித்து ஒரு புதிய திகதியை கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
