ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தவர் பரிதாபமாக உயிரிழப்பு
ஜேர்மனியில் (Germany) இருந்து யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) வந்த முதியவர் ஒருவர் கிருமி தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த முதியவர் நேற்றையதினம் (02) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியில் வசித்து வந்த 75 வயதான நடராசா கேதீஸ்வரநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிருமித் தாக்கத்தினால் உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், ”குறித்த முதியவர் கடந்த ஜனவரி மாதம் ஜேர்மனியில் இருந்து வருகை தந்து கோப்பாய் பகுதியில் வசித்து வந்த நிலையில் திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டு நேற்றையதினம் (02) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வின்சன் அன்ரலா மேற்கொண்டார்.
இனங்காண முடியாத கிருமித் தாக்கத்தினால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
