றம்புக்கண சம்பவம் - கைது செய்யப்பட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு விளக்கமறியல்!!
Sri Lanka Police
Rambukkana
Rambukkana Shooting
Rambukkana Protest
Sri Lanka Police Investigation
By Kanna
றம்புக்கண துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கேகாலைக்கு பொறுப்பான முன்னாள் காவல்துறை சிரேஷ்ட அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
றம்புக்கண சம்பவம் தொடர்பில் கேகாலைக்கு பொறுப்பான முன்னாள் காவல்துறை சிரேஷ்ட அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன மற்றும் மூன்று காவல்துறை அதிகாரிகள் நேற்று இரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, றம்புக்கண சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு காவல்துறை உத்தியோகத்தர்கள் தொடர்பிலான மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மற்றும் கண்டி சட்ட வைத்திய அதிகாரிகளுக்கு கேகாலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்