றம்புக்கணை துப்பாக்கி சூடு - உயர் அதிகாரி உட்பட நான்கு காவல்துறையினர் கைது
Sri Lanka Police
Rambukkana Shooting
Rambukkana Protest
By Sumithiran
கேகாலை – றம்புக்கணை பகுதியில் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கேகாலை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
றம்புக்கணையில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கி பிரயோகம் நடத்த அனுமதி வழங்கியமைக்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் மேலும் 3 காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை கொல்லப்பட்டதுடன் 15 வயது பாடசாலை மாணவன் உட்பட 24 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்