றம்புக்கண துப்பாக்கி சூடு தொடர்பில் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரிடம் புலனாய்வு பிரிவு விசாரணை
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Sri Lankan protests
Rambukkana Shooting
By Kiruththikan
றம்புக்கண நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிப் பிரயோகம் செய்து காவல்துறையினர் கலைத்தமை, துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்தமை தொடர்பிலான விசாரணைகள் குற்ற புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அந்த நிலையில், அவ்விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த விசாரணைகலில் ஓர் அங்கமாக, ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்பதை துல்லியமாக வெளிப்படுத்திக் கொள்ள, குறித்த சம்பவம் பதிவாகும் போது கேகாலை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சராக இருந்த அதிகாரியிடமும் றம்புக்கண காவல்துறை பொறுப்பதிகாரியாக இருந்தவரிடமும் விசாரணைகளை முன்னெடுக்க குற்ற புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி