கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட நால்வருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு
Keheliya Rambukwella
Sri Lanka
Sri Lanka Magistrate Court
By Shadhu Shanker
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) உட்பட நால்வரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானது மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றால் இன்று வியாழக்கிழமை (29) உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் நால்வரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியல் நீடிப்பு
தரமற்ற இம்யூனோகுளோபின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 22அம் திகதி வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |