கொக்குத்தொடுவாயில் அத்துமீறிய உப்பள நிர்மாணம் : ரவிகரன் எம்.பியிடமிருந்து பறந்த கடிதம்

Mullaitivu Sri Lanka Thurairajah Raviharan
By Independent Writer Jul 03, 2026 06:51 AM GMT
Report

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய முறையில் அமைக்கப்பட்டு வரும் உப்பளம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அந்தப் பகுதியில் மக்களுக்குச் சொந்தமான காணிகளை எல்லைப்படுத்துவது தொடர்பான தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறி உப்பளம் அமைப்பதைத் தடுத்தல் மற்றும் மக்களுக்குச் சொந்தமான காணிகளை எல்லைப்படுத்தல் தொடர்பாக தற்போதைய நிலை குறித்து வினவல் எனத் தலைப்பிடப்பட்டுள்ள குறித்த கடிதத்தில், கடந்த மார்ச் 12 அன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் விவசாய, கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் அவர்களின் தலைமையில் விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

வசந்த கரன்னாகொடவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வசந்த கரன்னாகொடவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மாவட்டச் செயலாளருக்குக் கோரிக்கை

இக்கூட்டத்தில், கொக்குத்தொடுவாய் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத உப்பள நிர்மாணம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், இப்பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காணும் பொறுப்பு முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அத்துமீறலுக்கு உள்ளாகும் காணிகள் அப்பகுதி மக்களுக்குச் சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்துவதற்காக, நில அளவை திணைக்களத்தின் மூலம் எல்லைகளை அடையாளப்படுத்துமாறு கடந்த மார்ச் 30 அன்று மாவட்டச் செயலாளருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கொக்குத்தொடுவாயில் அத்துமீறிய உப்பள நிர்மாணம் : ரவிகரன் எம்.பியிடமிருந்து பறந்த கடிதம் | Encroaching Saltern Construction At Kokkuthoduvai

எனினும், இந்த விடயம் ஏப்ரல் 08 அன்று மேலதிக நடவடிக்கைக்காகக் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளருக்குப் பாரப்படுத்தப்பட்ட போதிலும், இதுவரை அது குறித்து எவ்வித அடுத்தகட்ட நிர்வாக நடவடிக்கைகளோ அல்லது முன்னேற்ற அறிக்கைகளோ சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.

அப்பகுதி மக்களின் பூர்வீகக் காணிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, அத்துமீறி மேற்கொள்ளப்பட்டு வரும் உப்பள நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துவதற்கு மாவட்ட நிருவாகத்தினால் எடுக்கப்பட்ட நிர்வாக நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், பொதுமக்களுக்குச் சொந்தமான காணி எல்லைகளை முறைப்படி நில அளவை செய்து அடையாளப்படுத்தும் பணிகளின் தற்போதைய நிலைப்பாடு எவ்வாறு இருக்கின்றது.

பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் நில உரிமைகளையும் பாதுகாப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் நேரடித் தலையீடு இன்றியமையாதது என்பதால், இது தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்த விரிவான விளக்க அறிக்கையொன்றை விரைவாக வழங்குங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜபக்சாக்களால் சுரேஷ் சலேவிற்கு ஏற்பட போகும் ஆபத்து

ராஜபக்சாக்களால் சுரேஷ் சலேவிற்கு ஏற்பட போகும் ஆபத்து

யோஷித ராஜபக்‌சவின் ரிட் மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யோஷித ராஜபக்‌சவின் ரிட் மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


Gallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026