ரம்புட்டானால் ஏற்படவுள்ள தொற்று அபாயம் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை
ரம்புட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்களை உண்டப்பின் அதன் தோல்களை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் டெங்கு பெருகும் இடங்களை அவை உருவாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காலப்பகுதியில் ரம்புட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்கள் ஏராளமாக நாடுபூராகவும் விற்பனைசெய்யப்பட்டு வருகிறது.
எனினும், பழங்களின் தோல்களை பொதுமக்கள் முறையாக அப்புறப்படுத்தாததால் மீண்டும் ஒரு கொடிய நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பழங்களின் தோல்
அதன்படி, ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் தோல்கள் டெங்கு பெருகும் இடங்களை உருவாக்கக்கூடும் என்பதால் அவற்றை அப்புறப்படுத்துவதைத் தவிர்க்குமாறு கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் விளைச்சல் பருவகாலம் தற்போது ஆரம்பித்துள்ளதால் பலர் இந்தப் பழங்களின் தோல்களை எல்லா இடங்களிலும் வீசுவதைக் கவனித்ததால், இந்தக் கோரிக்கையை விடுப்பதாகவும் அவர் கூறினார்.
இதன்படி டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்ய பழத்தோல் போன்ற ஒரு சிறிய இடம் கூட போதுமானது என்றும் தீபால் பெரேரா மேலும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

