ரணிலுக்கு விழுந்த பேரிடி : முக்கிய காணொளிகளை வெளியிட்ட அரசாங்கம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) விளக்கமறியல் குறித்து நான்கு விளக்கக் காணொளிகளை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இந்த விளக்கங்கள் ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் வெவ்வேறு கோணங்களில் இருந்து வழங்கப்பட்டுள்ளன.
இதில் சமூகவியல் விளக்கத்தை களனி பல்கலைக்கழக மக்கள் தொடர்புத் துறைத் தலைவர் மனோஜ் ஜிந்தாச வழங்கியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி
மத மற்றும் நல்லிணக்கக் கண்ணோட்டத்தை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஓமரே புண்யசிறி தேரர் வழங்கியுள்ளார்.
சட்ட விளக்கத்தை மூத்த சட்டக் கல்வியலாளர் பேராசிரியர் பிரதிபா மகாநாமஹேவா வழங்கியுள்ளார்.
அதேநேரம் ஊடக மற்றும் சமூகவியல் கண்ணோட்டத்தை ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன வழங்கியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 22 ஆம் திகதி நாட்டின் பொதுப் பணத்தை குற்றவியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் (22) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரது தீர்ப்பு அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

