நிரந்தர அதிபராகிறார் ரணில் - ஐ.தே.க அசையாத நம்பிக்கை (காணொலி)
ரணில் விக்கிரமசிங்க, நிரந்தர அதிபர்
சிறிலங்காவின் தற்போதைய பதில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க, நிரந்தர அதிபர் பதவிக்காக நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தினால், 140 எம்.பி.க்கள் என்ற அதிக வாக்குகளைப் பெறுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுடன் இது தொடர்பாக ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிநேரத்தில் நிகழவுள்ள மாற்றம்
ஆனால், இறுதி நேரத்தில், வாக்கெடுப்பின்றி அனைவரது ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக நியமிக்கப்படுவார் என நம்புவதாக அவர் கூறினார்.
ஐம்பது வருட அனுபவமுள்ள ரணில் விக்கிரமசிங்க இலங்கையை உலகின் தலைசிறந்த நிலைக்கு உயர்த்துவதற்கும் ஆசியாவின் பெருமை மிகு நாடாக மாற்றுவதற்கும் பாடுபடுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
