விவசாயிகளுக்கு ரணில் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Food Crisis Economy of Sri Lanka
By Thulsi May 15, 2024 03:33 AM GMT
Report

புதிய விவசாய வர்த்தகத்துறையொன்றை உருவாக்கி நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தாம் செயற்பட்டு வருவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத்துறையில் புதிய தொழில்நுட்ப முகாமைத்துவத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

அதுருகிரிய தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் புதிய கல்வி மற்றும் நிர்வாக கட்டிடத்தை நேற்று (14) காலை திறந்து வைத்து உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நடுத்தர மக்களின் உணவுத் தேவை

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், விவசாயத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமே இந்நாட்டின் கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிக்க முடியும் என சுட்டிக்காட்டினார்.

விவசாயிகளுக்கு ரணில் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் | Ranil Establishment Of Agriculture Farmer Srilanka

இலங்கையை அண்டியுள்ள நாடுகளின் சனத்தொகை பல பில்லியன்களால் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது என்றும் அந்த நாடுகளில் உள்ள நடுத்தர மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் விவசாயத்தை உருவாக்குவதன் மூலம், இலங்கையின் ஏற்றுமதி விவசாயத் தொழிலை உயர்த்த முடியும்.

நாட்டின் பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றுவதற்கான சட்ட வரைபுக்கு நேற்று (13) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரம் இன்று மீண்டும் கட்டியெழுப்பப்படுகிறது. விவசாயத்தின் மூலம் இந்த நிலையை அடைய வாய்ப்பு கிடைத்தது.

பிரித்தானியாவில் தீவிரமடையும் வெப்ப தாக்கம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரித்தானியாவில் தீவிரமடையும் வெப்ப தாக்கம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அமைச்சரவை அங்கீகாரம்

அதன்படி, விவசாயத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டது என்றே கூற வேண்டும். இப்போது இந்த நாட்டுக்கு கடன் வழங்கிய நாடுகளுடனும் ஏனைய தனியார் கடன் வழங்குநர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

விவசாயிகளுக்கு ரணில் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் | Ranil Establishment Of Agriculture Farmer Srilanka

முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சவாலை எதிர்கொள்ள வேண்டும். எனவே நாட்டின் பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

இந்த நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான சட்ட வரைபுக்கு நேற்று (13) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இப்போது நாம் இந்த திட்டத்தை முன்னோக்கி செயல்படுத்த வேண்டும். வரலாற்று ரீதியாக நமது விவசாயம், ஏற்றுமதி விவசாயமாக மாறிவிட்டது. தற்போது விவசாயத்தை பலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அதனால் நாம் தோட்டங்களை விவசாய வர்த்தகமாக மாற்றி உற்பத்தியை பலப்படுத்த வேண்டும்.

பாரம்பரிய பயிர் உற்பத்தி

தேயிலை மற்றும் இறப்பர் செய்கையை ஊக்குவிக்க வேண்டும். அதற்கான சந்தை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இன்று எமது தேயிலை தொழில் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் அதனை சாதகமாக செய்கின்றன.

விவசாயிகளுக்கு ரணில் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் | Ranil Establishment Of Agriculture Farmer Srilanka

நாட்டின் பாரம்பரிய பயிர் உற்பத்தியைப் பலப்படுத்த வேண்டும். நமது நாடு கோகோவா, கருவா மற்றும் ஏனைய மசாலாப் பொருட்களையும் மீண்டும் நடுகை செய்ய வேண்டும். புதிய பயிர்களை விளைவிக்க வேண்டும்.

அதற்காக இத்துறைக்கு புதிய தொழில்நுட்ப முகாமைத்துவத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, உற்பத்தியை அதிகரிக்க சிறு தோட்ட உரிமையாளர்களையும் இந்த நவீனமயமாக்கல் திட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். விவசாயத்தை மேம்படுத்தினால் மட்டுமே கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிக்க முடியும்.

எனவே தற்போதுள்ள பயிர்கள் மற்றும் காணிகளையும் சிறந்த முறையில் பயன்படுத்தி 05 இலட்சம் ஏக்கர் புதிய காணியில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதற்கு நவீன விவசாயமும், நவீன விவசாய வர்த்தகமும் அவசியம். இந்த நாட்டில் விவசாயத்தை முக்கிய ஏற்றுமதி துறையாக மாற்ற வேண்டும்.

பொருளாதார ரீதியாக முன்னேற்றம்

எதிர்காலத்தில் இலங்கையை சூழவுள்ள நாடுகளின் சனத்தொகை பல பில்லியன்களால் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ரணில் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் | Ranil Establishment Of Agriculture Farmer Srilanka

பெருகிவரும் உலக மக்கள் தொகைக்கு உணவுச் சந்தையை வழங்க நாம் தயாராக இருக்க வேண்டும். பழைய தோட்டத் தொழிலுக்குப் பதிலாக புதிய விவசாய வியாபாரத்தை உருவாக்கி நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும்.

புதிய சட்டத்தின் ஊடாக நிறுவனங்களுக்கு இடையில் போடப்பட்டிருக்கும் தடைகள் அனைத்தையும் நீக்கி சகலரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான சூழலை உருவாக்க எதிர்பார்க்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி செலுத்திய இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்

கொரோனா தடுப்பூசி செலுத்திய இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011