அமைச்சர்கள், அரச எம்.பிக்கள் வெளிநாடு செல்லத் தடை - ரணில் அதிரடி உத்தரவு
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு, மருந்து ஏற்றப்படுவதால் நோயாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் மற்றும் மருத்துவர்கள் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறும் நிலை காரணமாக சுகாதாரத்துறை பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது.
இவ்வாறான நிலைமைக்கு சுகாதார அமைச்சரே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அந்த வகையில் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேணையை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
தீவிர கவனம்
இவ்வாறு கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்தியுள்ளார் அதிபர் ரணில்.
அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5, 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு அவர், அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிப்பதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவகாசம் தேவை என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் கோரியதுடன் அதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.