பசில் பெற்ற கடனில் ஆட்சி நடத்தும் ரணில் - அம்பலப்படுத்தும் சாகர காரியவசம்
Basil Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
Sagara Kariyawasam
By Sumithiran
பசில் ராஜபக்ச நிதியமைச்சராக இருந்தபோது பெற்ற கடனுதவியிலேயே அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆட்சி செய்து வருவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்றதன் பின்னர், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட 300 மில்லியன் டொலர்கள் மட்டுமே இதுவரையில் நாடு பெற்ற கடன் உதவி என அவர் குறிப்பிட்டார்.
அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பில்
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பில் அதிபருக்கு எழுத்துமூலம் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் ஆனால் அதற்காக அடிக்கடி கோரிக்கை விடுக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் பல மாவட்ட தலைவர்கள் அமைச்சர் பதவி கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்