விடுதலைப் புலிகள் விவகாரத்தில் ரணிலின் சதிவலை - நாடாளுமன்றில் பகிரங்கம்
Sri Lanka Army
Ranil Wickremesinghe
Mullivaikal Remembrance Day
Sri Lanka Final War
By Vanan
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சர்வதேச ரீதியில் பலவீனப்படுத்தி இராணுவ தீர்வுக்கு அடித்தளமிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஒரு நேர்மையற்ற தலைவர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழர்களிடம் இருந்து தலைவர்களை தேடாது, அவர்களிடம் இருந்து முகவர்களை தேடுவதே இதுவரை இனப்பிரச்சினை தீர்க்கப்படாமைக்கான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு நாடாளுமன்றில் அஞ்சலியையும் அவர் செலுத்தியிருந்தார்.
