தமிழர் தாயகத்தில் சாதனை நாயகியை சந்தித்தார் ரணில்
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற முல்லைத்தீவு முள்ளியவளையைச் சேர்ந்த அகில திருநாயகியை சந்தித்துள்ளார்.
இவரை நேற்று (06) வடமாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.
72 வயதான ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரியான இவர் சிறுவயதிலிருந்தே தடகளப் போட்டிகளில் திறமை காண்பித்தவர்.
''வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நிதி வழங்கப்படும்" அதிபர் ரணில் விக்ரமசிங்க
அகில திருநாயகியை சந்தித்த அதிபர்
அவர் நான்கு சகோதரர்கள் மற்றும் ஒன்பது சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் ஆறாவது பெண்ணாக பிறந்தார்.
தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியாவில் நடைபெற்ற பல சிரேஷ்ட வீரர்களுக்கான போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி இவர் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
அகில திருநாயகியின் விளையாட்டு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட அதிபர், அவருக்கு ஊக்கமளிக்கும் வகையில் பரிசில் ஒன்றையும் வழங்கி வைத்தார்.
மேலும், அவரது துணிச்சலான விளையாட்டு வாழ்க்கைக்கு அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |