ரணில் வழங்கியுள்ள 361 மதுபானசாலை உரிமங்கள்: நாடாளுமன்றில் முற்றாக அம்பலம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை 361 மதுபானசாலை உரிமங்களை அரசியல் லஞ்சமாக வழங்கியுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
அவற்றில் 172 FL4 என்றும் மதுபான கடை உரிமங்களும் உள்ளடங்குவதாக பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மொத்த உரிமங்கள்
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “2024 ஜனவரி முதலாம் திகதி முதல் மேல் மாகாணத்தில் 110, தென் மாகாணத்தில் 48, கிழக்கு மாகாணத்தில் 32, மத்திய மாகாணத்தில் 22, வட மத்திய மாகாணத்தில் 45, 14 வடமேற்கு மாகாணம், ஊவா மாகாணத்தில் 30, சப்ரகமுவ மாகாணத்தில் 30, என மொத்தம் 361 மதுபானசாலை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சில்லறை விற்பனை FL 4 எனப்படும் 172 மதுபான கடை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, கொழும்பு 22, கம்பஹா 18, களுத்துறை 08, காலி 09. மாத்தறை 05, அம்பாந்தோட்டை 05, யாழ்ப்பாணம் 05, கிளிநொச்சி 16, வவுனியா 02, மன்னார் 02, திருகோணமலை 04, மட்டக்களப்பு 01, அம்பாறை 05, கண்டி 11, மாத்தளை 06, நுவரெலியா 08, அனுராதபுரம் 04 பொலன்னறுவை 03, புத்தளம் 06, குருநாகல் 08, பதுளை 09, மொனராகலை 07, இரத்தினபுரி 06, கேகாலை 02 என குறித்த இடங்களில் 172 FL4 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரசியல் லஞ்சம்
முல்லைத்தீவில் எந்த உரிமங்களும் வழங்கப்படவில்லை.
இந்த உரிமங்களின் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் பார்குமார் என மாற்றம் பெற்றது.
கட்சி மாறுவதற்கான அரசியல் லஞ்சமாக இவை பயன்படுத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியிருந்ததை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |