சஜித்தை ஆதரித்த சுமந்திரனுக்கு ரணில் வழங்கிய பரிசுத்தொகை!
தமிழ் மக்களுக்கு எதிரிகளை விட உள்ளேயே இருக்ககூடிய சில புல்லுருவிகளை அடையாளம் காண வேண்டிய தேவை இருக்கின்றது என வடக்கு மாகாண சபை முன்னாள் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (07.09.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தமிழரசுக்கட்சியில் அவரது சகாக்ககும் சேர்ந்த சஜித்தை ஆதரிப்பதாக தீர்மானித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நாடளுமன்றத்தில் சாணக்கியனும் சுமந்திரனும் ரணிலை விமர்சித்து வந்தார்கள்.
இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் சுமந்திரனுக்கும் (M.A Sumanthiran) 5 கோடியும் சாணக்கியனுக்கு(R.Shankiyan) 60 கோடியும் ரணிலால் ஒதுக்கப்பட்டது.இந்த விடயம் நடைபெற்று சிறிது நாட்களில் தமிழரசுக்கட்சி சஜித்தை ஆதரிப்பதாக தெரிவித்தார்கள்.
இதற்கு அடுத்த நாள் நாடாளுமன்றத்தில் ரணிலை(Ranil) சுமந்திரன் சரமாரியாக திட்டித்தீர்த்தார். இவ்வாறு விமர்சித்து ஒரிரு தினங்களில் மேலும் 5 கோடி சுமந்திரனுக்காக ஒதுக்கப்பட்டது.
எனினும் ரிசாத் பதியூதின் சஜித்தை ஆதரித்ததால் அவருக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே , இங்கு சுமந்திரன் சஜித்தை ஆதரிப்பதாக கூறியது உண்மையாகவே அவரை ஆதரிக்கின்றாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்த விடயம் தொடர்பான முழுமையான விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்