ரணிலை வழிநடத்தும் மறைகரம்: அமைச்சரவைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை
அதிபர் ரணில் விக்ரமசிங்கவை மறைகரமொன்று வழிநடத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க தீடீர் என பதவி நீக்கப்பட்டதன் காரணமாகவே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டமை பாரதூரமான ஜனநாயக மீறல் எனவும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு அதிபர் விடுத்துள்ள சிகப்பு எச்சரிக்கையே இது என்றும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பதவி இழப்புகள்
மேலும், இது தொடர்பில் சஜித் கூறுகையில், அதிபரின் தீர்மானங்களுக்கு Yes Sir Yes Sir என ஆமோதிக்கத் தவறினால் இவ்வாறு பதவி இழக்க நேரிடும் என்பதே இதன் பொருளாகும்.
இந்த நாட்டில் யார் அமைச்சராக இருக்க வேண்டும் யார் அமைச்சராக இருக்கக் கூடாது என்பதனை சீனி மாபியா, கிரிக்கெட் மாபியா, கேஸ் மாபியா போன்றனவே தீர்மானிக்கின்றன.
அரசியல் சூழ்ச்சி
இந்த அதிபரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்தனர் என்ற போதிலும் அவர் நாடாளுமன்றை உதாசீனம் செய்து வருகின்றார்.
ரொஷான் ரணசிங்கவை அழைத்து இந்திய உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு நடத்தியது உண்மை எனவும் இது அரசியல் சூழ்ச்சி கிடையாது.கிரிக்கெட் தடையை நீக்கிக் கொள்ளவே நாம் முயற்சிக்கின்றோம்.
அரசியல் சூழ்ச்சிகளின் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் திட்டமில்லை, மக்களின் ஆணையின் ஊடாகவே ஆட்சி பீடம் ஏறுவோம்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் ..! |