முதலீட்டாளர்களுக்கு ரணில் விடுத்த அழைப்பு
இலங்கை - தாய்லாந்து பொருளாதார உறவுகளை மீட்டெடுக்க இரு நாட்டு முதலீட்டாளர்களும் ஒன்றிணையுமாறு அதபர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.
கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற இலங்கை - தாய்லாந்து வர்த்தக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை
அத்துடன், உணவு, உணவு மற்றும் பதப்படுத்துதல், சுகாதாரம், எரிசக்தி, விருந்தோம்பல், சுற்றுலா, மீன்பிடி, விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தாய்லாந்தின் பல முன்னணி நிறுவனங்களின் வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இதற்காக ஒன்றிணைந்துள்ளனர்.
அதேவேளை, ஆசியான் நாடு ஒன்றுடனான இரண்டாவது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையாக இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இலக்குகள்
இந்நிலையில், கிடைத்துள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு இலக்குகளை அடைவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு இரு நாட்டு வர்த்தகர்களையும் அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் தாய்லாந்து பிரதமர் தலைமையிலான குழுவினரும் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |