சிறிலங்கா அதிபரின் மகா சிவராத்திரி செய்தி
மகா சிவராத்திரி விரதத்தை பக்தியோடு அனுஷ்டிக்கும் அனைத்து இந்து மக்களின் வேண்டுதல்களும் நிறைவேற பிரார்த்திக்கிறேன் என அதிபர் ரணில் விக்மரசிங்க தெரிவித்தார்.
அதிபரின் ஊடகப் பிரிவால் இன்று வெளியிடப்பட்ட, மகா சிவராத்திரி செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இருள் நீங்கி ஒளி பரவட்டும்
மகா சிவராத்திரி செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் சிவராத்திரி நாளில் அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து காப்பாற்றும் நோக்கத்துடன் சிவபெருமானை வழிபடுகின்றனர்.
"இருள் நீங்கி ஒளி பரவட்டும்" என்ற பிரார்த்தனையுடன் கண்விழித்து இரவு முழுவதும் பிராத்தனை செய்கின்றனர்.
இது ஒருவருக்கொருவர் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தை வளர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பரஸ்பர மரியாதை மற்றும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லாமல் ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது.
சிவபெருமான்
சிவபெருமானின் இந்த பிரகாசமான இரவில் நாம், நமது உறவுகளை வலுப்படுத்த முடிவு செய்தால், நாடு எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் கடந்து, அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழிப்பு நிறைந்த நாட்டை நாம் நிச்சயமாக கட்டியெழுப்ப முடியும்.
மகா சிவராத்திரியில் ஏற்றப்படும் தீப ஒளியால் அனைத்து துன்பங்களும் நீங்கி, வளமான இலங்கையின் கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்” - என்றுள்ளது.