இங்கிலாந்து பிரதமருடன் ரணில் பேச்சுவார்த்தை!! வழங்கப்பட்ட உறுதிமொழி
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சனுடன்(BorisJohnson) பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
இது குறித்து ரணில் விக்ரமசிங்க தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஆதரவளிப்பதாக உறுதியளித்தார் இங்கிலாந்து பிரதமர்
"இன்று பொரிஸ் ஜோன்சனுடனான(BorisJohnson) கலந்துரையாடலின் போது, இலங்கையின் நிலைமை குறித்து நான் அவருக்கு விளக்கினேன். குறிப்பாக ஏற்றுமதி சார்ந்த திறந்த பொருளாதாரமாக இலங்கை மாறுவதற்கு எமக்கு ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்தார்”, என்று கலந்துரையாடலுக்குப் பின்னர் பிரதமர் டுவீட் செய்துள்ளார்.
During a discussion with @BorisJohnson today, I briefed him on the situation in Sri Lanka. He pledged to support us especially in the fields of tackling climate change and assisting Sri Lanka in becoming an export oriented open economy.
— Ranil Wickremesinghe (@RW_UNP) May 30, 2022
உலக வங்கியின் மறுப்பு அறிக்கை
இதேவேளை, அதிகரித்து வரும் நெருக்கடிக்கு மத்தியில் உலக வங்கி 700 மில்லியன் டொலர்களை வழங்க உறுதியளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு செய்தி வெளியிட்டது.
இருப்பினும், அவ்வாறான முடிவும் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் பொருத்தமான பொருளாதார கொள்கையொன்றை உருவாக்கும் வரை இலங்கைக்கு நிதியுதவி வழங்க போவதில்லை என்றும் உலக வங்கி மறுப்பு அறிக்கை வெளியிட்டது.
இவ்வாறான நிலையில் இங்கிலாந்து பிரதமர் ஆதரவளிப்பதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி,
இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த உலக வங்கி!! கடன் தொடர்பில் வெளியான மறுப்பு அறிக்கை
