வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய ரணில்
புதிய இணைப்பு
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் உள்ள அவரை பார்வையிட சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷடி சில்வா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சாதாரண அறைக்கு மாற்றப்படுவார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவாரா இல்லையா என்பதை ரணில் அல்லது அவரது குடும்பத்தினர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்க, மேலதிக சிகிச்சைக்காக கடந்த 23 ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இருதய அறுவை சிகிச்சை
இதற்கிடையில், ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன ரணில் விக்ரமசிங்கவின் இதயத்தில் உள்ள நான்கு முக்கிய தமனிகளில் மூன்று அடைப்பு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி சிறிது காலமாக நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது இதய திசு இறப்பு மற்றும் நுரையீரல் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி இருந்தனர்.
இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன கடந்த (27.08.2025) திகதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

