ரணிலை சந்தித்தாரா பிரதமர் ஹரிணி.! தொடரும் சர்ச்சைக்கு மத்தியில் கசிந்த தகவல்
வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட பிரதமர் ஹரிணி அமரசூரிய சென்றிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது.
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஊடகப் பிரிவு, இது போலியான செய்தி என்பதை எமது ஊடகத்திற்கு உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட பிரதமர் ஹரிணி அமரசூரிய கடந்த 24 அதிகாலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றதாக தென்னிலங்கையின் பிரதான ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
அதன்போது, முன்னாள் ஜனாதிபதி ரணிலின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவுடன் பிரதமர் வந்திருந்தாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட வந்தாரா இல்லையா என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் “செய்திகளுக்கு அப்பால்”நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

