அத்துரலியே ரத்தன தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
நுகேகொடை நீதிமன்றத்தில் முன்னிலையான அதுரலியே ரதன தேரர், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
நீதிமன்றத்திலிருந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் (Athuraliye Rathana Thero) இன்று (29) காலை நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து கடந்த 18 ஆம் திகதி அவரை கைது செய்ய நுகேகொடை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம்
முன்னதாக எங்கள் மக்கள் சக்தி (அபே ஜனபலவேகய) கட்சியின் பொதுச் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அத்துரலிய ரத்தன தேரரை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.
மேலும், 2020 ஆம் ஆண்டில் அக்கட்சி பெற்ற தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அத்துரலிய ரத்தன தேரர் பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர் கடந்த சில வாரங்களாக தலைமறைவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
