'2023' இறுதியை நோக்கிய ரணிலின் அரசியல் காய்நகர்த்தல் - குமார் குணரட்னம் வெளிப்படை

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis President of Sri lanka
By Vanan Dec 17, 2022 11:34 PM GMT
Report

2023 ஆண்டு இறுதியில் ராஜபக்ச, சஜித் அணி, தமிழ் தரப்பு ஆதரவுடன் அதிபர் வேட்பாளராக வருவதற்கான முயற்சியில் ரணில் விக்ரமசிங்க ஈடுபடுகிறார். அதற்கான முன்னேற்பாடே தமிழ் மக்கள் பிரச்சினையை தீர்க்கப்போவதாக அவர் கூறுகிறாரென தெரிவித்த முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரட்னம் தமிழ் தரப்புகள் இதனை விளங்கி கொள்ளவேண்டும் என்றார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று(17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.   அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரணிலின் விளையாட்டு

2015 நல்லாட்சி எனக் கூறிய காலத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகளை அவசரமாக தீர்ப்பது போன்ற தோற்றம் காட்டப்படுகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் பாவிப்போமென தமிழ் தரப்புக்கள் நம்பகூடாது.

போராட்டத்தை நம்பவேண்டும். ரணிலின் விளையாட்டுக்கு எடுபடக்கூடாது.

இனவாதத்திற்கு எதிரான தன்மையை காலி முகத்திடல் போராட்டத்தில் கண்டோம். ஆனால் தற்போது இன ஒற்றுமையை பிரிக்க முயற்சிக்கின்றனர்.

போராட்டத்திற்கு இடமளிக்கமாட்டேன் என ராஜபக்ஷவினருக்கு ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்துள்ளார். இராணுவம், காவல்துறை, புலனாய்வுத்துறை என்பன போராட்டத்தை அடக்க முனைப்பு காட்டுகின்றன. பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி போராட்டத்தை அடக்க முயல்கின்றனர்.

அது தொடர்பாக யாழ்ப்பாண மக்களுக்கு அனுபவம் உண்டு. சிங்கள மக்களுக்கு அது புதிதானதே.

போராட்ட சக்திகளை பிரிக்க பல்வேறுபட்ட முயற்சிகள் எடுக்கப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தை இலக்கு வைத்து தனியார் பல்கலைக்கழகத்தை உருவாக்க முயற்சிக்கிறார். வரவு - செலவுத்திட்டம் மூலம் ஒரு இலட்சம் வருமானம் பெறுபவரும் வரிசெலுத்தும் நிலை உள்ளது.

அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்றம் மூலம் செய்யமுடியாததை போராட்டம் மூலம் செய்யமுடிந்தது.

பொருளாதார நெருக்கடி

அதிகநேர மின்வெட்டு, வரி அறவீடு போன்றவற்றால் 2023ஆம் ஆண்டு போராட்டத்திற்கான வளர்ச்சியாக இருக்கும். நடுத்தர சாதரண மக்கள் பொருளாதார நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மாணவர்கள்,தொழிலாளர்கள், விவசாயிகள் கிளர்ந்தெழுவர்.

தேர்தலொன்று நடந்தால் அதனுடன் இணைந்ததாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு புதிய அரசியலமைப்பு கொண்டுவர வேண்டும்.

நாடாளுமன்ற முறைமை இருக்கட்டும். மக்கள் அதிகாரம் கொண்ட மக்கள் சபை உருவாக்கப்பட வேண்டும்.

ஜூலை 9 போராட்டத்தில் இதனையே கண்டோம். பிரதேசவாரியாக இவை உருவாக்கப்பட வேண்டும்”- என்றார். 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015