ராஜபக்சர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே ரணில்!
கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் பின் நாட்டை பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க ராஜபக்சர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் அருள் கோகிலன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கட்டமைப்பு முறைமை
அவர் மேலும் குறிப்பிடுகையில், “இலங்கையிலே இருக்கின்ற கட்டமைப்பு முறைமை, அரசியல் கலாசாரத்தை கொண்டு நகர்த்துவதற்கு இருக்கக்கூடிய முறைமையாகும்.
இந்த முறைமை இலஞ்சம், ஊழல், மோசடி அதேபோல் பொதுச் சொத்துக்களை வீண்விரயம் செய்தல் போன்றவற்றை மையப்படுத்தி இருக்கக்கூடிய அரசியல் கலாசாரம் ஆகும்.
அந்தவகையில், நாட்டில் ஊழல் மேலோங்கி இருந்த வேளையில் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக பொருளாதார நெருக்கடியான காலத்தி்ல் தேர்ந்தெடுத்தோம். எனினும் அக்காலப்பகுதியிலே நாட்டிலே ஊழல் இன்னும் தலைதூக்கியது.
இந்நிலையில், தற்போது ஜனாதிபதி அநுர கூறியது போல ஊழல் விபரங்கள் அடங்கிய அனைத்து கோப்புக்களுக்கும் எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |