நாடு திரும்பினார் ரணில் விக்ரமசிங்க
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று (24) நாடு திரும்பியுள்ளார்.
அதிபர் மற்றும் தூதுக் குழுவினர் இன்று காலை 8.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த செப்டம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கியூபாவின் ஹவானாவில் நடைபெற்ற G-77 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் அதிபர் கலந்து கொண்டார்.
அரச தலைவர்களுடன் சந்திப்பு
இதேவேளை 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது வருடாந்த அமர்வின் அரச தலைவர்களின் உச்சி மாநாட்டிலும் கலந்து கொண்டிருந்தார்.
ரணில் விக்ரமசிங்க தனது அமெரிக்க விஜயத்தின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர், பொதுநலவாய அமைப்பின் செயலாளர், ஈரான் அதிபர் உட்பட பல அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)