ரணிலின் வரவுசெலவுத்திட்டம் -பொன்சேகா கடும் விமர்சனம்
Sri Lanka Parliament
Ranil Wickremesinghe
Sarath Fonseka
Sri Lanka Budget 2022
By Sumithiran
பழைய கதைகளை சொல்லும் ரணில்
அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று சமர்ப்பித்த வரவு செலவு திட்டம் தொடர்பில் பீல்ட் மார்ஷல்,நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அதிபர் பழைய கதைகளை எல்லாம் சொன்னார்.அன்றிலிருந்து பல்வேறு தலைவர்களால் இந்தக் கதைகள் கூறப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
சர்வகட்சி அரசாங்கம்
அத்துடன், சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், திருடும் அரசாங்கத்துடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது எப்பொழுதும் பயனற்றவையே எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இன்றைய பொருளதாரத்தை பற்றி இன்னும் பலருக்கும் தெரியவில்லை என்று சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இடைக்கால வரவு செலவு திட்டத்தை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

