ரணிலின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத இந்திய விஜயம் : 3 நிமிடம் கொடுத்த மோடி!
சஜித்தும்(Sajith )அனுரவும்( Anura) கடந்த சில வாரங்களாக யாழ்ப்பாணப் பயணத்தைத் திட்டமிட்டுக் கொண்டிருந்த வேளையில், நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்கும் வைபவத்தில் கலந்துகொண்டு இலங்கையில் எப்படி பெரிய ஊடக நிகழ்ச்சியை நடத்துவது என்று அதிபர் ரணில்(ranil) திட்டமிட்டிருந்தார்.
அதன்படி இந்திய விஜயத்தின் போது மோடியை (modi) முதலில் இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுப்பதும், அழைப்பை ஏற்று இலங்கையில் பிரமாண்டமான நிகழ்ச்சியை நடத்துவதும் அதிபரின் திட்டமாக இருந்தது.
ரணிலின் திட்டம்
அதிபர் தேர்தலின் போது எப்படியாவது மோடியை இலங்கைக்கு வரவழைத்து தேர்தல் மேடையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திரைமறைவில் உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடலை அவர் ஆரம்பித்திருந்தார்.
இருப்பினும், மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இந்திய தரப்பில் இருந்து அதிபர் ரணில் மட்டுமன்றி, மாலைதீவு (Maldives) , நேபாளம் (Nepal), பூட்டான் (Bhutan) மற்றும் வங்கதேசம் (Bangladesh) போன்ற பிராந்தியத்தில் உள்ள மற்ற நாட்டுத் தலைவர்களும் அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டனர்.
சில அழைப்பிதழ்கள் மோடியால் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எவ்வாறாயினும், ஒரு பெரிய ஊடக குழுவுடன் நிகழ்ச்சியை நடத்த அதிபர் ரணில் இந்தியா சென்றிருந்தாலும், அவரை வரவேற்க இந்திய அரசாங்கத்தின் மேலதிக செயலாளர் டெல்லி விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
மோடியின் பதவியேற்பு நிகழ்வில் மிளிர்ந்த நட்சத்திரம்
மேலும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட நட்சத்திரம் மாலைதீவின் புதிய அதிபரே தவிர வேறு யாருமில்லை. மாலைதீவின் புதிய அதிபர் சீனாவுடன் நெருங்கிய உறவை கொண்டிருந்ததால், இந்திய பிரதமருக்கும், மாலைதீவு அதிபருக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது.
ஆனால் மாலைதீவு அதிபர், மோடியின் அழைப்பை ஏற்று மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றதால் அனைவரது கவனமும் ரணிலை விட மாலைதீவு அதிபர் மீதே குவிந்தது.
ரணிலுக்கு 3 நிமிடங்கள்
மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவ்வொரு அரச தலைவருக்கும் தம்முடன் கலந்துரையாட மூன்று நிமிடங்களை மோடி அளித்திருந்தார். அதன்படி, ரணிலும் அந்த மூன்று நிமிட காலத்திற்குள் மோடியுடன் தனிப்பட்ட முறையில் பேச முடிந்தது.
மேலும், அதிபர் ரணிலுக்கும் காந்தி குடும்பத்துக்கும் இடையே கடந்த காலத்திலிருந்து மிக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. அதன்படி, காந்தி குடும்பத்தினருக்கும் அதிபர் ரணிலுக்கும் இடையே சந்திப்பு இருக்கும் என பலரும் நினைத்தனர்.
காந்தி குடும்பத்துடனான உறவு
ஆனால் இந்த நிகழ்ச்சியுடன் இணைந்து காந்தி குடும்பத்தினர் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை(Sheikh Hasina) சந்தித்து கலந்துரையாடினர். இந்த நிகழ்வில் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi)சோனியா காந்தி (Sonia Gandhi) மற்றும் பிரியங்கா காந்தி(Priyanka Gandhi) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவ்வாறான சூழ்நிலையில், திட்டமிட்டபடி இந்திய விஜயத்தில் இருந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாத காரணத்தினால், திடீரென விஜயத்தின் முடிவில், அதிபர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்தியில், அதிபர் ரணில் மோடியை இலங்கைக்கு வருமாறு அழைத்ததாகவும் அதனை, மோடி ஏற்றுக்கொண்டதாகவும் மற்றும் மோடி ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருவார் எனதெரிவித்தது.
அதிபர் ஊடகப் பிரிவினால் இவ்வாறான அறிவிப்பு வெளியிடப்பட்ட போதிலும், அவ்வாறான அறிவிப்பை இந்திய வெளிவிவகார அமைச்சு அல்லது இந்திய ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.
மேலும், ஓகஸ்ட் மாதத்திற்குள் அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளிவரும் என்பதால், இதுபோன்ற தேர்தல்களின் போது மோடி இலங்கைக்கு வருவார் என நினைக்க முடியாது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |