பதிலளிக்கத் தயார்! நாமல் அதிரடி அறிவிப்பு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக இட்டுக்கட்டப்பட்ட பொய்களுக்குப் பதிலளிக்கும் வகையில், இம்மாத இறுதியில் இருந்து கிராமங்களை உள்ளடக்கி சுமார் 2500 தொடக்கம் 3000 வரையான கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
“அந்தப் பொய்யான விளம்பரங்களுக்கு முன்னரே பதிலளிக்காமல் இருப்பது தவறு” என்றார் எம்.பி.
பெரமுனவின் இதுவரையான செயற்பாடு
இந்தக் கூட்டத் தொடரின் போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் இதுவரையான செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் குறித்து கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மரக்கறிகளின் விலையை குறைப்பதற்கு
மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், அதிபர் கோட்டாபய ராஜபக்ச காலத்தில் கரிம உரங்களை அறிமுகப்படுத்தியதை விட மரக்கறிகளின் விலை தற்போது அதிகரித்துள்ளதால், மரக்கறிகளின் விலையை குறைப்பதற்கு குறிப்பிட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 10 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்