எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படத் தயார் : ஜீ.எல்.பீரிஸ்
நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாதகத்தை ஏற்படுத்தும் தரப்பினருக்கு எதிராக எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
கட்டம்பே ராஜோபவனாராம விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பலமானதொரு எதிர்க்கட்சியை கட்டியெழுப்பவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள்
அத்துடன் ஆபத்தான பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு எதிராகச் செயற்படுவதுடன், மக்களைப் பாதுகாப்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இல்லாதவர்களிடம் இருந்து முடியுமானவரை வரியை அறவிடுகின்றதுடன் தனவந்தர்கள் மீது கைவைப்பதில்லை எனவும் இதனால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஈடுகொடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை அனைத்து அமைச்சர்களும் அதிபரின் கைக்கூலிகளாக மாறிவிட்டதுடன் அனைத்தும் அதிபரின் கட்டுப்பாட்டில் உள்ளதெனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |