மகிந்தவின் வெளியேற்றத்தின் பின்னால் விடுதலைப் புலிகள் - ஆதரவு வழங்கும் அநுர - சாடும் மொட்டு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksa) உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்த வெளியேற்றியமையானது டயஸ்போராக்களையும் விடுதலைப்புலிகளையும் மகிழ்ச்சிப்படுத்துகின்ற அநுர அரசாங்கத்தின் செயற்பாடு என மொட்டுக்கட்சி ஆதரவாளர்கள் குறிப்பிட்டதாக லங்காசிறியின் பிராந்திய செய்தியாளர் வி.டில்சான் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் வெளியேற்றம் மற்றும் அங்கிருந்த சூழ்நிலைகள் குறித்து லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் செய்த வேலையானது ஒரு அரசியல் பழிவாங்கல் என மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் குறிப்பிட்டனர்.
அதுமாத்திரமின்றி டயஸ்போராக்களையும் விடுதலைப்புலிகளையும் மகிழ்ச்சிப்படுத்துகின்ற ஒரு வேலையை தான் அநுர அரசாங்கம் செய்திருக்கின்றது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும் அநுர அரசாங்கம் செய்வது அனைத்துமே டயஸ்போராக்களின் திட்டங்கள் என குறிப்பிட்ட அவர்கள் விடுதலைப் புலிகளின் திட்டங்களின் பட்டியலில் வருகின்ற ஒரு வேலைப்பாடு தான் இது எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
அத்துடன் மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என மொட்டுக்கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.” என தெரிவித்தார்.
இது இவ்வாறு இருக்க மகிந்த ராஜபக்சவிற்கு கொழும்பில் வீடுகளை வழங்க தமிழர் ஒருவர் உட்பட நால்வர் முன்வந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி ...............
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
