அனைத்திற்கும் காரணமானவர் பசில் - சஜித் பிரேமதாஸ விளாசல்
sajith
basil
reason
current crisis situation
By Vanan
பசில் ராஜபக்ச தனது பணியை செய்யத்தவறியமையே நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு காரணம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாட்டின் நெருக்கடி நிலை குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டின் பொருளாதாரம் பாரதூரமான அளவுக்குப் பின்நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், அனைத்துப் பிரச்சினைக்கும் அரசாங்கம் கொரோனாவே காரணம் என்கிறது அரசாங்கம்.
எனினும் வேறெந்த நாடுகளிலும் கொரோனாவால் பொருளாதாரம் இந்தளவுக்குப் பாதிக்கப்படவில்லை.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளுக்கு நிதி அமைச்சர், நிதிச் சபை மற்றும் மத்திய வங்கியே பொறுப்புக்கூற வேண்டும்.
இவர்கள் அனைவரும் அவர்களின் பணிகளை செய்யத்தவறியமையே தற்போதைய நிலைமைக்குக் காரணம்” என்றார்.
