E8 விசா சர்ச்சையின் பின்னணியில் இருந்த நபர்: உண்மையை போட்டுடைத்த அநுர தரப்பு
கொரிய வேலைவாய்ப்புகளுக்கான E8 விசா வகைக்காக முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஒரு சட்டவிரோத ஒப்பந்தம் என வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்றைய (9.1.2025) நாடாளுமன்ற அமர்வின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, கொரியாவின் வாண்டோ கவுண்டியின் மேயருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது, அதனை வாசித்து கூட பார்க்கவில்லை என்றும் அமைச்சர் விஜித கூறியுள்ளார்.
கொரிய வேலைவாய்ப்பு
இவ்வாறனதொரு பின்னணியில், சட்டவிரோதமாக கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை இளைஞர்களை கொரியாவிற்கு அனுப்புவதற்கான இனி எந்த வாய்ப்பும் இல்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் பாகிஸ்தானுக்காக தயாரிக்கப்பட்ட ஒப்பந்தம் என்றும், ஒரு தொழிலாளி ஏதேனும் துன்பத்தை சந்தித்தால், பணம் செலுத்தும் இடம் பாகிஸ்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நிவாரணத் திட்டம்
அதன்படி, பாகிஸ்தானுக்காக தயாரிக்கப்பட்ட ஒப்பந்தம் இலங்கைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், சட்டவிரோத E8 விசா முறையின் கீழ் இலங்கை தொழிலாளர்கள் இனி கொரியாவிற்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்றும், இதன் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் திட்டத்தை வகுக்க அமைச்சகம் எதிர்பார்க்கிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |