தமிழரசுக்கட்சியின் பின்னடைவிற்கான காரணங்கள்: உண்மைகளை அம்பலப்படுத்திய சிறீதரன்!
தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழரசுக்கட்சியை நீதிமன்ற வழக்குகளில் கொண்ட சென்று நிறுத்தியது மக்களை வெறுப்புக்குள்ளாக்கியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தமிழர் பகுதிகளில் தமிழர்களின் வாக்கு தேசிய மக்கள் சக்திக்கு சென்றமைக்கு மக்களின் அதிருப்தியின்மையே காரணம் எனலாம்.
பொதுவேட்பாளருக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்காமை போன்ற காரணங்கள் இந்த அதிருப்தியின்மையை ஏற்படுத்தியிருக்கின்றது.
3 ஆசனங்களை பெற்ற ஜேவிபி தற்போது பொரும்பான்மை பெற்று ஆசனங்கனை பெற்றதை போல வடக்கு கிழக்கு மாகாணங்களில் 8 ஆசனங்கனை பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆசனங்களும், கூடுவதற்கான வாய்ப்புகள உண்ட, அதற்கான முயற்சிகளை நாங்கள் முன்னெடுப்போம்.
கட்சிக்குள்ளான ஒற்றுமையின்மை தன்மை எங்களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தியிருக்கின்றது.
தமிழரசுகட்சி மீதான வழக்கை மீளப்பெற்றார்களானால் தமிழ் தேசியத்தை கட்டி காப்பாற்றலாம், எனவே இதனை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுகின்றேன்.
இதேநிலை தொடருமானால் அடுத்த தேர்தலிலும் அபாய சங்கு ஊதப்படும்.” என்றார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |