இலங்கையின் ஆட்சி மாற்றம் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாடு
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தினை புலம்பெயர் தமிழர்களும் கொண்டாடுவதாக தெரிகின்றது.
களங்கம் இல்லாத அரசியல் வாதிகளை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
புலம் பெயர் சிங்கள மக்கள் இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இருக்கின்றனர், அதில் வெற்றியையும் கண்டுள்ளனர்.
அநுரகுமார ( Anura Kumara Dissanayake) ஆட்சிபீடம் ஏறியதும் முள்ளிவாய்க்கால் துயரம் போன்ற தமிழ் தரப்பு விடயங்களை பற்றி பேசினால் இனவாதம் பேசாதீர்கள் என்ற நிலைப்பாடு தமிழர் தரப்பில் உருவாகியுள்ளது.
ஒரு இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி வரலாற்றுபதிவாகும், அது அவ்வப்போது பேசப்பட வேண்டும். மக்கள் நீண்டகால பிரச்சினைகளையும் பார்க்க தங்களின் அன்றாட பிரச்சினைகளை தான் பெரிதாக பார்ப்பார்கள்.
எனவே அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதாக பிரசாரம் செய்ததன் மூலமே அநுரவின் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.
மேலும், தமிழ் அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியதன் மூலம், எதனையும் சாதிக்க முடியவில்லை.
இது தொடர்பில் மேலும் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |