வரவேற்பு மண்டபக் கட்டணங்கள் அதிகரிப்பு
அகில இலங்கை வரவேற்பு மண்டப உரிமையாளர்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம், மற்றும் உணவு வழங்கும் சேவைகளுக்காக இதுவரை அறவிடப்பட்ட கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி இன்று (08.04.2026) முதல் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய சங்கத்தின் தலைவர் அக்கில ஜெயரத்ன,
எரிபொருள் நெருக்கடி
மே மாதம் முதல் செய்யப்படும் புதிய முன்பதிவுகளுக்கான கட்டணங்கள் சுமார் 15% முதல் 20% வரை அதிகரிக்கக்கூடும்.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் மதிப்புக்கூட்டு வரி (VAT) விதிக்கப்பட்டதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட சேவைகளுக்கு 10% விலை உயர்வு அமல்படுத்தப்படும் என்றும் அந்த சங்கம் மேலும் குறிப்பிட்டது.
இதன்படி பொருட்களின் விலை உயர்வால் தங்களது தொழில்துறை கடுமையான நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், தொழில்துறையைப் பாதுகாப்பதற்காகவே கட்டணங்களைத் திருத்தியமைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
இருப்பினும், தங்களது பிரச்சினைகளுக்கு அரசு முறையான தீர்வுகளையோ அல்லது நிவாரணத்தையோ வழங்கினால், உயர்த்தப்பட்ட கட்டணங்களை மீண்டும் குறைக்கத் தயாராக இருக்கின்றோன்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |