விமானப்படை கோப்ரல் ஒருவரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட உயிருள்ள வெடிமருந்துகள்
Sri Lanka
Sri Lanka Air Force
Arrest
By Kanooshiya
விமானப்படை கோப்ரல் ஒருவரின் வீட்டிலிருந்து T-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 9.62X39 வகையிலான 35 உயிருள்ள தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வாத்துவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, குறித்த விமானப்படை கோப்ரல் கொம்பெனி தெரு பிரதேசத்தில் விமானப்படை தளத்தில் பணிபுரிந்து வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
உயிருள்ள தோட்டாக்கள்
குறித்த நபருக்கு சொந்தமாக மொல்லிகொட பகுதியில் உள்ள வீடொன்றில் உயிருள்ள தோட்டாக்கள் உள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் சந்தேகநபர் பணியில் இருக்கும் விமானப்படை தளத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகநபரின் வாக்குமூலங்களைப் பெற்ற பிறகு மேலும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
9ம் ஆண்டு நினைவஞ்சலி