FCIDயிடம் சிக்குவாரா ஷிரந்தி..! விடுக்கப்பட்ட அழைப்பாணை - சிக்கலில் ராஜபக்ச குடும்பம்
தனிப்பட்ட காரணங்களினால் இன்றைய தினம் (27) காவல்துறை நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக முடியாது என ஷிரந்தி ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இதற்கமைய, அங்கு முன்னிலையாவதற்காக அவர் இரண்டு வார கால அவகாசத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்காக, இன்றைய தினம் காலை 9 மணிக்கு காவல்துறை நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
விசாரணைக்கு வருமாறு அழைப்பு
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் 'சிரிலிய' எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட கணக்கின் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக காவல்துறை நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்தியா சென்றுள்ள நிலையில் விசாரணைக்கு வருமாறு குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளனர்.
நாமல் இந்தியா சென்றிருப்பதனை அறிந்தே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது காவல்துறையினரின் நடவடிக்கை அல்ல, மாறாக மக்கள் விடுதலை முன்னணியின் காவல்துறையினரே அரசியல் இலாபத்திற்காக இவ்வாறு செயற்படுகின்றனர் என சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |