இலஞ்ச ஊழல் பிடியில் 2025 இல் சிக்கிய முக்கிய புள்ளிகள்...! வெளியான தகவல்

Sri Lanka Police Bribery Commission Sri Lanka Law and Order
By Shalini Balachandran Jan 27, 2026 04:09 AM GMT
Report

கடந்த ஆண்டில் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 130 சுற்றிவளைப்புகளில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

தமிழர் பகுதியை உலுக்கிய சோகம் - காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

தமிழர் பகுதியை உலுக்கிய சோகம் - காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

ஏனைய விசாரணைகள்

இந்தக் கைதுகளில் அதிகப்படியானோர் இலங்கை காவல் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் எண்ணிக்கை 30 என குறிப்பிடப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட காவல் உத்தியோகத்தர்களில் 13 காவல் சார்ஜன்ட்கள், ஒன்பது காவல் கான்ஸ்டபிள்கள், நான்கு உப காவல்துறை பரிசோதகர்கள் மற்றும் இரண்டு தலைமை காவல்துறை பரிசோதகர்கள் அடங்குவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலஞ்ச ஊழல் பிடியில் 2025 இல் சிக்கிய முக்கிய புள்ளிகள்...! வெளியான தகவல் | Sri Lanka Bribery Probe 84 Arrested In 2025

காவல்துறையினரை தவிர நீதி அமைச்சுடன் தொடர்புடைய 11 பேர், விவசாய சேவைகள் திணைக்களத்தின் ஐந்து அதிகாரிகள், மூன்று கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபைகளின் மூன்று அதிகாரிகள் ஆகியோரும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றிவளைப்புகள் மூலம் இடம்பெற்ற கைதுகளைத் தவிர முன்னெடுக்கப்பட்ட ஏனைய விசாரணைகள் ஊடாக 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைத்தொலைபேசி பயன்படுத்தும் சிறுவர்கள்..! வெளியான அதிர்ச்சித் தகவல்

கைத்தொலைபேசி பயன்படுத்தும் சிறுவர்கள்..! வெளியான அதிர்ச்சித் தகவல்

முறைப்பாடுகள் 

இவர்களில் முன்னாள் அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வைத்தியர்கள் மற்றும் பிரதேச சபைகளின் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளடங்குவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, 2025 ஆம் ஆண்டில் 153 பேருக்கு எதிராக 115 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 69 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இலஞ்ச ஊழல் பிடியில் 2025 இல் சிக்கிய முக்கிய புள்ளிகள்...! வெளியான தகவல் | Sri Lanka Bribery Probe 84 Arrested In 2025

கடந்த ஆண்டில் ஆணைக்குழுவிற்கு 8,409 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் அவற்றில் 569 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அரசாங்க சேவையில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை

இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016