கைப்பற்றப்பட்ட பில்லியன் பெறுமதியிலான ஹெரோயின் போதைப்பொருள்!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Sri Lanka Navy
Crime
By Pakirathan
நேற்றைய தினம் தெற்கு கடற்பரப்பில் வைத்து மீன்பிடி கப்பலொன்றில் இருந்து பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் 175 கிலோ எனக் கூறப்பட்டுள்ளது.
குறித்த கப்பலில் இருந்த 6 நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
பெறுமதி
காவல்துறை மற்றும் புலனாய்வுத் துறையின் உதவியுடன் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இலங்கைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் வைத்து போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பலினை கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கைப்பற்றப்பட்ட குறித்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 3.5 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி