பெண்போராளிகளின் மனித எச்சங்கள் பச்சை சீருடைகளுடன் மீட்பு
Sri Lanka Police
Mullaitivu
Sri Lanka Police Investigation
By Sumithiran
முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மத்தி பகுதியில் பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பை மேற்கொள்ளும் வகையில் கனரக இயந்திரம் கொண்டு நிலத்தை தோண்டியுள்ளார்கள்.
அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள்

இதன்போது மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து கொக்கிளாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள்

இது பெண் போராளிகளின் தடையங்களாக காணப்படுகின்றன. பெண்களின் மேலாடை பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன இதன்போது இனம் காணப்பட்டுள்ளன.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 13 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி