அல்கைதாவுக்கு உதவிய இலங்கையர்கள்! சிவப்பு எச்சரிக்கையை பிறப்பித்த நீதிமன்றம்

Sri Lanka Easter Attack Sri Lanka Pakistan
By Sathangani Jan 27, 2024 04:02 AM GMT
Report

அல்கைதா அமைப்பிற்கு உதவியதாக கூறப்படும் இலங்கையர்கள் 04 பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் இலங்கையைச் சேர்ந்த சிலர் அல்கைதா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தமை குறித்து தகவல்களை திரட்டியிருந்தனர்.

இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டில், பயங்கரவாதத் தடுப்புப் விசாரணைப் பிரிவு குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

திறைசேரிக்கு வழங்கி வைக்கப்பட்ட 1.5 பில்லியன் ரூபா நிதி

திறைசேரிக்கு வழங்கி வைக்கப்பட்ட 1.5 பில்லியன் ரூபா நிதி

கொழும்பு மேல் நீதிமன்றம்

அத்தோடு, கொழும்பு மேல் நீதிமன்றில் 10 சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில் மேலும் 05 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது வழக்கு விசாரணையில் உள்ளது.

அல்கைதாவுக்கு உதவிய இலங்கையர்கள்! சிவப்பு எச்சரிக்கையை பிறப்பித்த நீதிமன்றம் | Red Alert For 4 Sri Lankans Who Aided Al Qaeda

இந்நிலையில், வழக்குடன் தொடர்புடைய மேலும் 04 பேர் இலங்கையை விட்டும் வெளியேறி வேறு நாடுகளில் வசிப்பதாக பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் நேற்று (26) கொழும்பு மேல் நீதிமன்றில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தனர்.

அத்துடன், அவர்களுக்கு எதிராக சர்வதேச பிடியாணை ஒன்றைப் பிறப்பிக்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த 21 வயது யுவதி

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த 21 வயது யுவதி

பயங்கரவாத தடுப்பு விசாரணை

இதன்படி வழக்கின் முதலாம், இரண்டாம், ஒன்பதாம் மற்றும் பதினாறாம் சந்தேக நபர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்கைதாவுக்கு உதவிய இலங்கையர்கள்! சிவப்பு எச்சரிக்கையை பிறப்பித்த நீதிமன்றம் | Red Alert For 4 Sri Lankans Who Aided Al Qaeda

சந்தேக நபர்கள் முன்னர் கல்எளிய மற்றும் கலகெடிஹேன பிரதேசத்தில் வசித்துள்ளதுடன் தற்போது அவுஸ்திரேலியா மற்றும் சிரியாவில் வசிப்பதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மகன் மற்றும் மேலும் இருவரே இவ்வாறு வெளிநாடுகளில் வசிப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை எனப்படும் சர்வதேச பிடியாணை நேற்று நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க குறித்த நான்கு பேருக்கும் எதிராக சர்வதேச பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நெடுஞ்சாலை விபத்துக்களுக்குரிய காரணம் : பந்துல வெளியிட்ட முக்கிய தகவல்

நெடுஞ்சாலை விபத்துக்களுக்குரிய காரணம் : பந்துல வெளியிட்ட முக்கிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024