குறைவடையும் கையடக்க தொலைபேசிகளின் விலைகள்
iPhone
Samsung Galaxy Mobile
Dollar to Sri Lankan Rupee
Dollars
By Dharu
கையடக்க தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி உபகரணங்களின் விலையை சுமார் 20 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (09) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் சமித் செனரத், ரூபாவின் பெறுமதியின் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, தற்போதுள்ள தொலைபேசிகளின் கையிருப்பு முடிந்தவுடன் இறக்குமதி செய்யப்படும் புதிய தொலைபேசிகள் ஊடக மக்களுக்கு பலன் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்