திடீரென குறைக்கப்பட்ட பொருட்களின் விலை - விலை விபரம் உள்ளே...
Food Shortages
Sri Lanka Food Crisis
By Kiruththikan
புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் சில பொருட்களின் விலைகளில் திடீர் குறைவு ஏற்பட்டுள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கிலோ பருப்பு விலை 330 ரூபாயாக குறைந்துள்ளது. முன்னதாக ஒரு கிலோ பருப்பு மொத்த விற்பனை விலை ரூபாயாக இருந்தது.
அதன்படி, ஒரு கிலோ பருப்பின் மொத்த விலை 30 ரூபாவால் குறைந்துள்ளது.
இதேவேளை, மொத்த சந்தையில் ஒரு கிலோ பெரிய கிழங்கு 110 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோ 100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள்
அத்துடன், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 215 ரூபாவிலிருந்து 230 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியின் மொத்த விலை 215 ரூபாவாகவே உள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி