திடீரென விலை குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் - விலை விபரம் உள்ளே...
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By pavan
மூன்று அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த விலை குறைப்பு இன்று (30) தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளதாக சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
புதிய விலை
அதன்படி, "ஒரு கிலோ வெள்ளை அரிசி 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 165 ரூபாவாகும்.
ஒரு கிலோ வெள்ளை நாட்டு அரிசி 07 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 168 ரூபாவாகும்.
ஒரு கிலோ சிவப்பு அரிசி 02 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 137 ரூபாவாகும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது

