வெங்காயத்தின் பண்ட வரி குறைப்பு: வெளியான மகிழ்ச்சி தகவல்
Onion
Sri Lankan Peoples
Income Tax Department
By Dilakshan
இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் ஒரு கிலோகிராமிற்கான பண்ட வரியை குறைக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் பண்டவரியானது, 30 ரூபாவில் இருந்து 10 ரூபாவாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில், உள்ளூர் விவசாயிகளின் நலனுக்காகவும், நுகர்வோருக்கு நியாயமான விலையை உறுதி செய்யவும் குறுகிய கால நடவடிக்கையாக இதனை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நடைமுறை காலம்
இந்த வரி குறைப்பானது, டிசம்பர் 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்காலத்தில் எடுக்கப்படும் விஞ்ஞாபன முடிவுகளின் அடிப்படையில் தகுந்த சட்ட விதிகளின் கீழ் இதனை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்