இன்று முதல் குறைக்கப்படவுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகள்
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் ஆறு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் இன்று (26) முதல் குறைக்கப்பட்டுள்ளன.
லங்கா ச.தொ.ச சந்தைப்படுத்தல் முகாமையாளர் இஷான் கொடமன்னே வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விலை குறைப்பு தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
விலை விபரம்
அதன்படி, பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமுக்கு 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 309 ரூபாவாகவும்,

வெள்ளை சீனி ஒரு கிலோகிராமுக்கு 4 ரூபாவால் குறைக்கப்பட்டு 245 ரூபாவாகவும்
சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராமுக்கு 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 242 ரூபாவாகவும்,
கோதுமை மா 5 ரூபாவால் குறைக்கப்பட்டு 174 ரூபாவாகவும்
சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோகிராமுக்கு 1 ரூபாவால் குறைக்கப்பட்டு 173 ரூபாவாகவும்
வெள்ளை பச்சை அரிசி 5 ரூபாவால் குறைக்கப்பட்டு 174 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளன.
நுகர்வோருக்கு நிவாரணம்
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதுடன், வறுமை ஒழிப்புக்கு ஆதரவளிக்கும் தேசிய நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்த விலைக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.
புதிய விலைகளில் குறித்த ஆறு அத்தியாவசியப் பொருட்களையும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச கிளைகளிலும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |